மத்தியாஸ் கோர்மன், பொதுச் செயலாளர், ஓஇசிடி
ஜி-20 உறுப்பு நாடுகளிடையே இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் 6 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். உண்மையில், இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் உலகளாவிய வளர்ச்சியை இயக்க உதவுகிறது. பிரதமர் மோடி இந்தியாவுக்கு உத்வேகம் அளிக்கும் தலைவராக இருந்து வருகிறார். அவரும் அவரது அணியினரும் 2023-ல் ஜி20-ஐ வழி நடத்துவதில் சிறந்த பணியைச் செய்துள்ளனர்.