மயங்க் அகர்வால், இந்திய கிரிக்கெட் வீரர்
அவரைப்போன்ற (பிரதமர் மோடி) தொலைநோக்கு பார்வை கொண்டவரை சந்தித்துப் பெருமையான உணர்வை ஏற்படுத்தியது. எங்கள் அனைவருக்கும் அவர் உந்துசக்தியாக இருக்கிறார். நாட்டுக்கு அவர் அர்ப்பனிக்கும் நேரமும் சக்தியும் மிகவும் சிறப்புடையதாகும். அவர் செய்கின்ற பணியும் அதற்கு அவர் செலவிடும் நேரமும் நம் அனைவராலும் கவனிக்கத் தக்கதாகும். 10-15 ஆண்டுகளுக்கு தேவையானதை அவர் முன்கூட்டியே சிந்திக்கிறார். இது உண்மையிலேயே மகத்தானது நாட்டுக்கு நன்மை பயப்பது.