“வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா மேம்பட்டுள்ளது பற்றி கேட்கும்போது அது உண்மையிலேயே ஒரு நேர்மறையான கதையாகவே அமைகிறது. களத்தில் எமது அனுபவங்களும் அதையே சொல்கின்றன. இன்று நடப்பதின் உண்மையான புகழ் திரு. மோடியையே சாரும். இதற்கு முன்பு விரைவு வழியில் திட்டங்களை இந்தியாவில் தொடங்கவும், நிறைவேற்றுவதற்கும் பலப் பல ஆண்டுகள் ஆகும். ஆனால் இன்று விரைவு வழியில் வரும் ஒரு தொழில் திட்ட்த்திற்கான ஒப்பந்தம் ஒரு சில மாதங்களிலேயே போடப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளாகவே நிறைவேற்றப்படுகிறது. நடைமுறையில் இந்த வேறுபாடு மிகவும் நன்றாகவே தெரிகிறது. நிலைமை இப்படித்தான் இருக்க வேண்டும்.”