“இந்த முன்னோடி முயற்சியான துடிப்பான குஜராத் உச்சிமாநாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதனைத் தொடர்ந்த இதே மாதிரியான மாநாடுகள் ஆகியவற்றுக்கான பெருமை ஒருவரைத்தான் சாரும். குஜராத்தின் பெருமைமிகு மைந்தன், இந்தியாவின் தொலைநோக்குத் தலைவன், திரு நரேந்திர மோடி, நமது அன்புக்குரிய பிரதமர். இவரது தலைமையின் கீழ் இந்தியா உலகின் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. உலகம் மொத்தமும் பிரதமர் மோடியை செயல் வீர்ர் என அங்கீகரித்துள்ளது”