தனது உரையில் எனது பெயரை பிரதமர் மோடி குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சியான வியப்பாக உள்ளது. உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இது உண்மையில் எனக்கு பெரிய கவுரவம். எனது நாட்டில் எனது பெயரை குறிப்பிட்டு, எனது சமுதாயத்தின் அடையாளம் பற்றி குறிப்பிட்டுள்ளார். இது பெரிய விஷயம். இலங்கைக்கு மூத்த சகோதரர் போன்றது இந்தியா. அப்படியான ஓர் உறவைத்தான் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவின் உதவி எங்களுக்குத் தேவை. பல வழிகளில் எங்களுக்கு இந்தியா உதவிட முடியும். அது எங்கள் நாட்டுக்கு பெரிய விஷயமாக இருக்கும். எல்லோரையும் போல பிரதமர் மோடியை நாங்கள் நேசிக்கிறோம். இந்திய மக்களுக்காக அவர் நிறைய நடவடிக்கைகள் எடுத்துள்ளார். இதுவரையில் அவர் பல விஷயங்களைச் செய்திருக்கிறார். அவருடைய பிரபலத்துவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் காலங்களில் நாங்கள் அதைக் காண முடியும். மக்கள் அவரை நேசிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.