முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது மிகுந்த பெருமையை அளிக்கிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் அவர் உந்துசக்தியாக உள்ளார். கம்பீரமான இந்தியாவுக்கான அவரது தொலைநோக்கை அவர் பகிர்ந்துள்ளார். அவருடனான உரையாடல் அற்புதமாக அமைந்தது, என்னை பொறுத்தவரை எனது கனவு நனவானது. நாட்டுக்காக அவர் செய்து வரும் மிகச்சிறந்த பணிக்காக நான் வாழ்த்துகிறேன். பெருமைமிகு கம்பீரமான இந்தியாவுக்காக அவர் ஆற்றிவரும் பணிக்காக ஒவ்வொரு இந்தியரும் அவரைப் பின்பற்ற வேண்டும்.