பிரதமர் திரு. மோடியுடனான சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமாக இருந்தது. நமது இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகளை பலப்படுத்துவதற்கான வழிகள் பற்றி பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்ததற்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்கா மற்றும் இந்தியாவில் வேலைவாய்ப்புகளையும் பொருளாதார ஆதாயங்களையும் உருவாக்குகிற நிலையில், இந்தியாவிலும் அந்தப் பிராந்தியத்திலும் தேசப் பாதுகாப்புக்கு உதவும் தொழில்நுட்பங்கள் மற்றும் சாதனங்களை வழங்குவதில் இந்திய அரசு மற்றும் தொழில் துறையினருடன் பங்களிப்பதில் லாக்ஹீட் மார்ட்டினுக்கு நீண்ட கால வரலாறு உள்ளது.