யஷ், நடிகர்
அவர் (பிரதமர் திரு நரேந்திர மோடி) எங்களது கருத்துக்களை பொறுமையாகக் கேட்டதுடன், திரைப்பட தொழில்துறை குறித்த அவரது தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய கருத்துக்களை எங்களிடம் பேசினார். எங்களது எதிர்பார்ப்புகள் என்ன, எங்களது தேவைகள் என்ன, அரசிடமிருந்து நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம், ஒரு தொழில்துறையாக நாங்கள் நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்பதையெல்லாம் அவர் கேட்டறிந்தார். இந்தத் துறை குறித்த துல்லியமான விவரங்களையும், நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதையும் அவர் அறிந்துவைத்திருப்பதன் மூலம் நான் பெரிதும் கவரப்பட்டேன். இது மென்மையான தாக்கம் என அவர் கூறினார்.