யூசுஃப் அலி, தலைவர், லூலு சர்வதேச குழுமம்
“தாராளமயமாக்கலின் விளைவாகவும், வலுவான தலைமையினால் உருவாக்கப்பட்ட சூழலினாலும், வலுவான பொருளாதாரத்தினாலும்  அனைத்து நாடுகளும் இப்போதெல்லாம் இந்தியாவில் முதலீடு செய்ய முயல்கின்றன. உலகத்தில் வலுவான பொருளாதார சக்திகளில் ஒன்றாக இந்தியா விரைவிலேயே மாறவிருக்கிறது. இதற்கு முன்பெல்லாம் வெளிநாடுகளில் வாழும் இரண்டரை- மூன்று கோடி இந்தியர்கள் நமது மகத்தான நாட்டில் முதலீடு செய்ய பலவிதமான கட்டுப்பாடுகள் இருந்து வந்தன. ஆனால் இப்போது பெருமளவிற்கு தாராளமயமாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் செய்யும் முதலீடு இப்போது உள்நாட்டு முதலீடாகவே கருதப்படுகிறது. நேரடி அந்நிய முதலீடும் மேம்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடுகளோடு கூடிய அந்நிய முதலீட்டிற்கான கூட்டு முயற்சிகளை இப்போது இந்தியாவில் மேற்கொள்ள முடியும். எளிதாக வர்த்தகம் செய்வதற்கான  தரவரிசை மேம்படுவதற்கான இதுவும் முக்கியமானதொரு காரணமாக அமைகிறது.”