நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சிக்கும், மேதகு நரேந்திர மோடிக்கும் @narendramodi, உகாண்டா அரசு மற்றும் மக்கள் சார்பில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியர் களுடன் சமமான இலக்குகளையும், விருப்பங்களையும் ஆப்பிரிக்க மக்கள் கொண்டுள்ளனர். 1947-ம் ஆண்டில் இந்தியா சுதந்திரமடைந்த போது, காலனி ஆதிக்கத்துக்கு எதிராக போராடி, அதனைத் தூக்கி எறியும் ஊக்கத்தை ஆப்பிரிக்க மக்கள் பெற்றனர். இன்று, அனைத்து ஆப்பிரிக்க நாடுகளும் அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுள்ளன. எனவே, இந்தியாவை உத்தி சார்ந்ததாக நாங்கள் அங்கீகரிக்கிறோம். அமைதி மற்றும் வளத்தை தொடர்வது உள்ளிட்ட பொதுவான விருப்பங்களை இந்தியா மற்றும் உகாண்டா மக்கள் பெற்றுள்ளனர். நமது குடிமக்களின் நலனை உறுதிப்படுத்துவதற்காக நாம் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்.