சுகாதாரத்தின் முக்கியத்துவம் என்பது குடிமக்களின் இயற்கையான உரிமை என்பது மட்டுமின்றி, இந்தியாவில் வளர்ந்து வரும் நடுத்தர வகுப்பினரின் எதிர்பார்ப்புகளை சந்திப்பதற்கான அரசியல் கருவி என்பதையும் பிரதமர் நரேந்திர மோடி உள்வாங்கியிருக்கிறார் . . . பல ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்ட பிறகு, சுகாதாரம் பற்றிய பொதுமக்களின் அதிருப்தியை இந்திய அரசு ஒருவழியாக அங்கீகரித்திருக்கிறது. இந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் எனப்படும் புதிய முன்முயற்சியின்கீழ், பிரதமர் மோடி இரண்டு புதிய முக்கியமான திட்டங்களை அமல்படுத்தியிருக்கிறார். இந்த இரண்டு திட்டங்களும் இணைந்து தரமான சுகாதார சேவைகள் கிடைப்பதை அதிகரிக்கும்; சுகாதாரத்திற்கான செலவைக் குறைக்கும்