கனவு நனவானதைப் போன்ற உணர்வு உள்ளது..... நான் பிரதமரை மாபெரும் நாயகராகக் கருதுகிறேன். அவருடனான சந்திப்பு மகிழ்ச்சியளிக்கிறது. கன்னட திரைப்படத் துறையில் என்னவெல்லாம் நடைபெறுகிறது என்பது குறித்து அவர் விசாரித்ததுடன், எங்களுக்கு தேவையான ஆதரவு குறித்தும் கேட்டறிந்தார். நாங்கள் முன்னேறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அவர் வழிகாட்டினார். காந்தாரா கன்னட திரைப்படம் குறித்தும் அவர் பேசியதுடன், உலகம் முழுவதும் எங்களது வெற்றிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். காந்தாரா திரைப்படம் குறித்து அவர் பலமுறை பேசியது என்னை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்தது.