இந்தியா அனைவருக்குமான முதலீட்டு மையமாக இருப்பதை உறுதி செய்வதில் நமது பிரதமர் உண்மையிலேயே ஆர்வமாக இருப்பதை நான் காண்கிறேன். இந்தியாவில் முதலீடு செய்வதை எளிதாக்க பிரதமர் விரும்புகிறார். குறிப்பாக எம்பிராய்டரி எனப்படும் பூத்தையல் துறையில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசினோம். உலக அரங்கில் கதர் துணியை எவ்வாறு கொண்டு சேர்க்கலாம் என்பது குறித்தும் விவாதித்தோம். இந்தியாவின் உள்நாட்டுக் கைவினைப்பொருட்களை ஊக்குவிப்பதில் பிரதமர் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்.