லீனா நாயர், சேனல் தலைமைச் செயல் அதிகாரி
பிரதமரை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் பேசியது எனக்கு பெருமையான தருணம். எனது சாதனைகளைப் பற்றி அவர் மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் பேசினார். நான் மற்ற பெண்களை தொடர்ந்து ஆதரிப்பதிலும், இந்தியாவிலிருந்து வரும் பல பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதிலும் அவர் மிகவும் விருப்பத்துடன் உள்ளார். வணிகத்தில், பெண்கள் வளர வேண்டும் என்பதில் பிரதமரிடம் ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருப்பதை நீங்கள் காணலாம்.