நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுவதிலும், நமது நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் @narendramodiயின் வெற்றிகரமான மூன்றாவது பதவிக்காலத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச ஒழுங்கில் உள்ள அநீதிகளை எதிர்கொள்வதிலும், பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டத்திலும் பிரேசிலும் இந்தியாவும் கூட்டாளிகளாக உள்ளன. பிரேசிலில் நடைபெறும் ஜி20 மற்றும் இப்சா உச்சிமாநாடுகளில் நாம் சந்தித்து, தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்.