வில்லியம் ரூடோ, கென்யா அதிபர்
அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி @narendramodi அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது ஜனநாயகத்தின் துடிப்பையும், முதிர்ச்சியையும் உலகிற்கு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியதற்காக இந்திய மக்களை நான் பாராட்ட விரும்புகிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் வலிமைக்கு இது மற்றொரு சான்றாகும். மேதகு மோடி அவர்களே, நீங்கள் முன்னோக்கிச் செல்லும்போது, சிறந்த இந்தியாவுக்கான உங்கள் உறுதிப்பாடு, வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை விரைவுபடுத்தி, நாட்டின் ஒற்றுமை மற்றும் செழிப்பை மேம்படுத்தும் என்று நான் நம்புகிறேன். உங்களது கூட்டாளி மற்றும் நண்பர் என்ற முறையில், நமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், மோதல்கள், பருவநிலை நெருக்கடி மற்றும் கடன் சுமை உள்ளிட்ட நமது உலகின் ஸ்திரத்தன்மை மற்றும் அதன் நிலைத்தன்மையை அச்சுறுத்தும் மிகவும் வலிமையான சவால்களுக்கு ஒத்துழைப்பு மூலமான தீர்வுகளுக்கும் தேடலை முடுக்கிவிட ஒன்றிணைந்து செயல்படவும் கென்யா எதிர்நோக்குகிறது.