“கடந்த இரு ஆண்டுகளில் பிரதம மந்திரி திரு. மோடியின் தலைமையில் நான் கண்டது உலகப் பொருளாதாரத்தில் நாம் தகுதியான இடத்தை எட்டுவதற்காக நாம் எப்படி முன்னேறுகிறோம் என்பதுதான். இந்தியாவில் தயாரிப்போம் (The Make In India) என்ற யோசனை இதை உறுதிப்படுத்துகிறது. உலக நாடுகளில் இந்தியாவைப் பற்றி உணர்த்துவதற்காக அலுப்பின்றி முயற்சி செய்து, வதன் மூலம் சர்வதேச ராஜதந்திர தளத்தில் இந்தியாவை நிலைபெறச் செய்திருக்கிறார். அதே சமயம் நம் நாட்டின் சுய மரியாதை, சுய மதிப்பு ஆகியவற்றைக் காப்பாற்றி வருகிறார். இன்றைய நிலையில், அவரைப் போல் வேறு யாரும் இந்தியாவைச் சிறந்த வகையில் வழிநடத்த முடியாது”