ஷ்ரத்த ஜெயின், இன்ஸ்டாகிராம் செல்வாக்கு பெற்றவர்
நமது நாட்டின் பிரதமருடனான சந்திப்பு ... அதனை நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்?... இன்னமும் நான் பிரமிப்புடன் இருக்கிறேன்... என்னை சந்தித்து அவர் கைகளைக் குலுக்கிய பின் அறைக்குள், நான் நுழைந்த போது 'ஆயியோ!' என்று கூறினார்... எனது சமூக ஊடகத்தில் ஆயியோ என்பதை அடையாளமாக வைத்திருக்கிறேன், அதனை அவர் நினைவுகூர்ந்தார். இதனை அவர் கூறுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை! அது மிகுந்த சிறப்புடையதாகவும் அன்பானதாகவும் இருந்தது. தென்னிந்திய திரைப்படத் தொழில் துறை நமது நாட்டின் அழகையும் வளத்தையும் எவ்வாறு படம் பிடிக்கிறது என்பது பற்றி பெருமிதம் கொள்வதாக அவர் கூறினார்.