ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஆன்மிக  குரு
கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கவும் & தீவிரவாதிகளுக்கு நிதி செல்வதைத் தடுக்கவும் பிரதமர் எடுத்துள்ள பெரிய நடவடிக்கை என்று நான் கூறுவேன். ஊழலுக்கு எதிராகப் போராடியவர்களுக்கு இது மகிழ்ச்சி தரும் தருணமாக உள்ளது. சாமானிய மக்களைப் பொருத்தவரையில், நமது இளைய தலைமுறையினருக்கு நல்ல எதிர்காலத்தைத் தருவதாகவும், பொருளாதார சமநிலையையும் அளிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை நிம்மதியைத் தருவதாக இருக்கும். இதுபோன்ற தைரியமான நடவடிக்கை எடுத்ததற்காக நமது பிரதமரை நான்  பாராட்டுகிறேன். இந்த முடிவுக்கு மாறுபட்ட கருத்துகள் வரும். ஆனால் நீண்டகால நோக்கில் நாட்டிற்கு இது நல்லது.