ஹரிஹரன், பாடகர்
சப்னே தும்ஹே புகாரா ஸ்ரீ ராம் ஜி என்ற பக்திப் பாடலை சுமார் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு பாடினேன்... இந்த பாடலைப் பற்றி பிரதமர் மோடி எழுதியது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. நாடு முழுவதும் இப்பாடல் கேட்கப்படுகிறது. ஜனவரி 22-ம் தேதி அயோத்திக்கு செல்ல எனக்கு அழைப்பு வந்தது. நான், எனது நண்பர் ஒருவருடன் அயோத்திக்கு செல்ல உள்ளேன். நான் பிரதமர் மோடியை சந்தித்துள்ளேன். அவரது சில விழாக்களில் பாடல்களைப் பாடியுள்ளேன். ஆனால், அவர் எனது பாடலை விவரித்த விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. உண்மையில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.