பி.எம்.இந்தியா
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு ஆஷ்டன் கார்ட்டர் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
இந்தியா, அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த அமைச்சர் கார்ட்டரின் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்கு தாம் மேற்கொண்ட வெற்றிகரமான பயணத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். அமெரிக்கா உடனான திடமான மற்றும் வலுவான இருதரப்பு உறவில் இந்தியா உறுதியாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் எடுக்கப்பட்ட முடிவுகளின் முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் அமைச்சர் கார்ட்டர் விளக்கினார்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து தங்களின் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
Mr. Ashton Carter, US Secretary of Defence met PM @narendramodi in Delhi. @DeptofDefense pic.twitter.com/DU9j9TxjxS
— PMO India (@PMOIndia) December 8, 2016
Had a very good meeting with US Secretary of Defence, Mr. Ashton Carter. pic.twitter.com/VtSmnnhq2z
— Narendra Modi (@narendramodi) December 8, 2016