Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பெல்ஜியம் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு. பார்ட் டி வெவருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


பெல்ஜியம் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு பார்ட் டி வெவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா-பெல்ஜியம் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், உலகளாவிய விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இணைந்து பணியாற்றுவோம் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள பார்ட் டி வெவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியா-பெல்ஜியம் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், உலகளாவிய விவகாரங்களில் நமது ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன். உங்கள் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.”

***

(Release ID: 2099368)
TS/IR/RR/KR