பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மாநிலம் பூர்ணியாவில் ரூ.40,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளைத் தொடங்கிவைத்து புதிய பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், கூடியிருந்தோர் அனைவருக்கும் தமது மரியாதைக்குரிய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். பூர்ணியா என்பது மா பூரண் தேவி, பக்த பிரஹ்லாத் மற்றும் மகரிஷி மெஹி பாபாவின் பூமி என்று அவர் குறிப்பிட்டார். இந்த மண் பனீஷ்வர்நாத் ரேணு மற்றும் சதிநாத் பாதுரி போன்ற இலக்கிய மேதைகளை கண்டுள்ளது என்று திரு மோடி எடுத்துரைத்தார். வினோபா பாவே போன்ற அர்ப்பணிப்புள்ள கர்மயோகிகளின் கர்மபூமி இது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த பூமியின் மீதான தமது ஆழ்ந்த மரியாதையை மீண்டும் வெளிப்படுத்தினார்.
பீகாரில் சுமார் ரூ.40,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப்பணிகளைத் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டப்படுவதாக அறிவித்த திரு மோடி, ரயில்வே, விமான நிலையங்கள், மின்சாரம் மற்றும் நீர் உள்ளிட்ட இந்தத் திட்டங்கள் சீமாஞ்சலின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான வழியாக செயல்படும் என்பதை எடுத்துரைத்தார். பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 40,000-க்கும் மேற்பட்ட பயனாளிகள் நிரந்தர வீடுகளைப் பெற்றுள்ளனர் என்று அவர் கூறினார். இது, இந்த 40,000 குடும்பங்களின் வாழ்க்கையில் தற்போது ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். தந்தேராஸ், தீபாவளி மற்றும் சத் பூஜைக்கு முன் நிரந்தர வீட்டில் நுழைவது ஒரு பெரிய அதிர்ஷ்டம் என்று அவர் குறிப்பிட்டார். இந்த அனைத்து குடும்பங்களுக்கும் அவர் தமது நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
வீடற்ற சகோதர சகோதரிகளுக்கு ஒரு நாள் நிரந்தர வீடு கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துவதே இன்றைய நிகழ்ச்சியாகும் என்று குறிப்பிட்ட பிரதமர், கடந்த 11 ஆண்டுகளில், ஏழைகளுக்கு 4 கோடிக்கும் மேற்பட்ட நிரந்தர வீடுகளை அரசு கட்டி வழங்கியுள்ளது என்று கூறினார். அரசு தற்போது 3 கோடி புதிய வீடுகளைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக அவர் மேலும் கூறினார். ஒவ்வொரு ஏழைக் குடிமகனுக்கும் நிரந்தர வீடு கிடைக்கும் வரை, மோடி ஓயமாட்டேன் என்று திரு மோடி உறுதிப்படுத்தினார். விளிம்புநிலை மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதும் ஏழைகளுக்கு சேவை செய்வதும் தமது ஆட்சியின் முக்கிய நோக்கம் என்று அவர் எடுத்துரைத்தார்.
பொறியாளர்கள் தினமான இன்று, நாடு முழுவதும் உள்ள அனைத்து பொறியாளர்களுக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்தார். பொறியாளர்களின் அர்ப்பணிப்பும் திறமையும் இன்றைய நிகழ்விலும் தெளிவாகத் தெரிகிறது என்று திரு மோடி எடுத்துரைத்தார். பூர்ணியா விமான நிலையத்தின் முனையக் கட்டிடம் ஐந்து மாதங்களுக்கும் குறைவான காலத்தில் கட்டப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். இந்த முனையம் திறக்கப்படுவதை அறிவித்து முதல் வணிக விமானத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதிய விமான நிலையம் தொடங்கப்பட்டதன் மூலம், பூர்ணியா தற்போது நாட்டின் விமானப் போக்குவரத்து வரைபடத்தில் இடம்பிடித்துள்ளது என்று பிரதமர் கூறினார். இது பூர்ணியா மற்றும் சீமாஞ்சல் இடையே நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய வணிக மையங்களுடன் நேரடி போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
***
AD/IR/AG/SH
बिहार के लोगों का जीवन आसान बनाने के लिए डबल इंजन सरकार लगातार काम कर रही है। आज पूर्णिया से हजारों करोड़ रुपये के विकास कार्यों का लोकार्पण-शिलान्यास कर अत्यंत प्रसन्न हूं। https://t.co/mHT2VGjbOV
— Narendra Modi (@narendramodi) September 15, 2025
अब पूर्णिया देश के Aviation Map पर आ गया है। pic.twitter.com/qi30qKiBSE
— PMO India (@PMOIndia) September 15, 2025
मैंने बिहार के आप लोगों से राष्ट्रीय मखाना बोर्ड के गठन का वायदा किया था।
— PMO India (@PMOIndia) September 15, 2025
केंद्र सरकार ने कल ही राष्ट्रीय मखाना बोर्ड की स्थापना के लिए नोटिफिकेशन जारी कर दिया है: PM @narendramodi pic.twitter.com/9TsVFKY9At
भारत में भारत का कानून चलेगा, घुसपैठियों की मनमानी नहीं।
— PMO India (@PMOIndia) September 15, 2025
ये मोदी की गारंटी है- घुसपैठियों पर कार्रवाई भी होगी और देश अच्छा परिणाम भी देखेगा: PM @narendramodi pic.twitter.com/nG8Undg1fv
पूर्णिया में मुझे आशीर्वाद देने अपार संख्या में आए अपने परिवारजनों को देखकर भावविभोर हूं। इस अपनत्व और स्नेह के लिए आप सभी का हृदय से अभिनंदन! pic.twitter.com/8rFHfPGl7w
— Narendra Modi (@narendramodi) September 15, 2025
आधुनिक हाई-टेक रेल सेवाओं और नई रेल लाइनों की शुरुआत से बिहार की प्रगति को नई गति मिलने वाली है। pic.twitter.com/sDtoRMGwQb
— Narendra Modi (@narendramodi) September 15, 2025
बिहार के चौतरफा विकास के लिए सीमांचल का विकास जरूरी है। इसी विजन के साथ आज पूर्णिया एयरपोर्ट की टर्मिनल बिल्डिंग के शुभारंभ के साथ ही राज्य की कनेक्टिविटी को एक नया विस्तार दिया गया है। pic.twitter.com/7cTQ9CVwAm
— Narendra Modi (@narendramodi) September 15, 2025
बिहार के मेरे किसान भाई-बहनों के लिए मखाने की खेती आय का एक महत्वपूर्ण जरिया है। राष्ट्रीय मखाना बोर्ड इस दिशा में बहुत मददगार साबित होने वाला है। pic.twitter.com/xO3stcVZID
— Narendra Modi (@narendramodi) September 15, 2025
एनडीए सरकार में आज बिहार जहां हर क्षेत्र में विकास के नए कीर्तिमान बनाने में जुटा है, वहीं कांग्रेस-आरजेडी ने अपने नफरती एजेंडे के साथ एक बार फिर बिहार को बदनाम करने की ठान ली है। pic.twitter.com/CnzO9Afh1U
— Narendra Modi (@narendramodi) September 15, 2025
घुसपैठियों पर कार्रवाई जरूर होगी और बिहार सहित पूरा देश इसके अच्छे परिणाम भी देखेगा- ये मोदी की गारंटी है! pic.twitter.com/xRTwAlwjrV
— Narendra Modi (@narendramodi) September 15, 2025
RJD के दौर में बिहार की हमारी माताएं-बहनें और बेटियां हत्या, बलात्कार और फिरौती जैसे अपराधों की भुक्तभोगी रही थीं। आज डबल इंजन सरकार में वे लखपति दीदी, ड्रोन दीदी और जीविका दीदी बनकर सशक्त हो रही हैं। pic.twitter.com/v0OJggoGOf
— Narendra Modi (@narendramodi) September 15, 2025