பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின்போது கீழ்க்கண்ட ஒப்பந்தங்கள்/ புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்/ கையெழுத்திடப்பட்டு, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
1.இந்தியா–நெதர்லாந்து உத்திசார் ஒத்துழைப்புக்கான செயல் திட்டம் [2026-2030].
2. சோழர் கால செப்பேடுகளை இந்தியாவிடம் அளித்தல்.
3. இந்திய அரசுக்கும் நெதர்லாந்து அரசுக்கும் இடையில் மக்களின் போக்குவரத்து, இடப்பெயர்வு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.
4. தோலேராவில் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைக்கு ஆதரவளிக்க டாடா எலக்ட்ரானிக்ஸ் – ஏஎஸ்எம்எல் நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
5. மத்திய சுரங்க அமைச்சகத்திற்கும் நெதர்லாந்து வெளியுறவு அமைச்சகத்திற்கும் இடையே முக்கிய கனிமங்கள் துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.
6.குஜராத்தில் உள்ள கல்பாசர் திட்டம் தொடர்பான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக, மத்திய ஜல் சக்தி அமைச்சகத்திற்கும், நெதர்லாந்தின் உள்கட்டமைப்பு நீர் மேலாண்மை அமைச்சகத்திற்கும் இடையேயான ஒத்துழைப்புக் கடிதம்.
7.பசுமை ஹைட்ரஜன் மேம்பாட்டில் இந்தியா–நெதர்லாந்து இடையே செயல் திட்டம்.
8.புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒத்துழைப்புக்கான புதுப்பிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஒரு கூட்டுப் பணிக்குழுவை நிறுவ முடிவு செய்யப்பட்டது.
9.எரிசக்தித் துறையில் மாற்றத்திற்கான திட்டங்களில் ஒத்துழைப்பது தொடர்பாக நித்தி ஆயோக் – நெதர்லாந்து இடையேயான கூட்டு செயல்திட்ட அறிக்கை
10.மேற்கு திரிபுராவில் மலர்களுக்கான இந்தியா–நெதர்லாந்து சிறப்பு மையத்தை நிறுவுதல்.
11.பெங்களூருவில் உள்ள கால்நடை வளர்ப்பு சிறப்பு மையத்தில் (CEAH) பால்வளப் பயிற்சிக்கான இந்தியா–நெதர்லாந்து சிறப்பு மையத்தை நிறுவுதல்
12. மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால்வள அமைச்சகத்திற்கும், நெதர்லாந்தின் வேளாண்மை, மீன்வளம், உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையே, கால்நடை வளர்ப்பு – பால்வளத் துறையில் ஒத்துழைப்பு குறித்த கூட்டுப் பிரகடனம்.
13.இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR), நெதர்லாந்து தேசிய பொது சுகாதாரம் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு/கூட்டுறவு குறித்த செயல்திட்டம்.
14.இந்தியக் அரசுக்கும் நெதர்லாந்து அரசுக்கும் இடையே சுங்க விவகாரங்களில் பரஸ்பர நிர்வாக உதவி குறித்த ஒப்பந்தம்
15.இந்திய அரசுக்கும் நெதர்லாந்து அரசுக்கும் இடையே உயர்கல்வித் துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
16.இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத்திற்கும், நெதர்லாந்தின் க்ரோனிங்கன் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
17. லைடன் பல்கலைக்கழக நூலகங்களுக்கும் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
***
(Release ID: 2261882)
TV/PLM/RJ
These are substantive and important outcomes that will add unparalleled momentum to the friendship between India and the Netherlands. These outcomes cover many sectors and will enhance growth and prosperity for our nations. https://t.co/k5LwK2qOYs
— Narendra Modi (@narendramodi) May 16, 2026