பி.எம்.இந்தியா
ஆஸ்லோவில் உள்ள அரச அரண்மனையில் நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.
இந்திய மக்களின் நல்வாழ்த்துகளைப் பிரதமர் பகிர்ந்து கொண்டார். நார்வேயின் இயற்கை அழகைப் பாராட்டிய பிரதமர், ஜனநாயகம், சட்ட விதிகள் மற்றும் மக்கள் சார்ந்த நிர்வாகம் ஆகிய பகிரப்பட்ட மாண்புகளில் வேரூன்றியிருக்கும், இந்தியாவுக்கும் நார்வேக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு, தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு மோடியும், மேன்மை பொருந்திய மன்னார் ஐந்தாம் ஹரால்டும், இந்திய மற்றும் நார்வே நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பல்வேறு துறைகளில், குறிப்பாக புதிய தொழில்நுட்பங்களில் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தனர்.
இரு தலைவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து, பிரதமரைக் கௌரவிக்கும் வகையில் மாண்புமிகு மன்னர் அவருக்கு மதிய விருந்து அளித்தார்.
தமக்கு வழங்கப்பட்ட சிறப்பான விருந்தோம்பலுக்காக, மேன்மை பொருந்திய மன்னருக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார்.
(Release ID: 2262484)
****
TV/BR/SH