பி.எம்.இந்தியா
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் நடைபெறும் 3-வது இந்தியா-நோர்டிக் உச்சிமாநாட்டின் இடையே, பிரதமர் திரு. நரேந்திர மோடி, பின்லாந்து பிரதமர் திரு. பெட்டேரி ஓர்போவை இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தியா மற்றும் பின்லாந்து இடையேயான உறவு, ‘டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நிலையான வளர்ச்சி’க்கான வியூக ரீதியிலான கூட்டாண்மையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
உலகளாவிய பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் சீராக வளர்ந்து வருவதற்கு இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். மேலும், தற்போதைய இருதரப்பு வர்த்தகத்தை வரும் 2030-ம் ஆண்டிற்குள் இரண்டு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் மற்றும் மறுசுழற்சி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், “உலகளாவிய சுழற்சி பொருளாதார மாநாட்டை” வரும் செப்டம்பர் மாதம், குஜராத் மாநிலம் காந்திநகரில் இந்தியா மற்றும் பின்லாந்து நாடுகள் இணைந்து கூட்டாக நடத்தவுள்ளன.
தொழில்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வித்துறையினருக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, 5ஜி/6ஜி தொழில்நுட்பங்கள் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம், விண்வெளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி , கல்வி மற்றும் கண்டுபிடிப்புகள், இரு நாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களின் பரஸ்பர முதலீடுகள் ஆகியவற்றில் தற்போதைய ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பின்லாந்தின் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு, அங்கு வாழும் இந்திய வல்லுநர்கள் வழங்கி வரும் பங்களிப்பைப் பின்லாந்து பிரதமர் வெகுவாகப் பாராட்டினார்.
ஐரோப்பிய யூனியன் மற்றும் நோர்டிக் பிராந்தியத்தில் பின்லாந்து இந்தியாவின் மிக முக்கியப் பங்காளியாகத் திகழ்கிறது. இந்தச் சந்திப்பின் போது, இந்தியா – ஐரோப்பிய யூனியனின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமலுக்கு வருவதன் முக்கியத்துவம் குறித்தும், பிராந்திய மற்றும் உலகளாவிய நடப்புகள் குறித்தும் இரு தலைவர்களும் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
(Release ID: 2262933)
****
TV/PKV/SH
PM @narendramodi met PM @PetteriOrpo of Finland and reviewed the growing momentum in India-Finland relations. The two leaders discussed expanding cooperation in areas such as AI, 6G, education and nuclear energy, while also exploring deeper collaboration in climate action,… pic.twitter.com/epCPk93CAr
— PMO India (@PMOIndia) May 19, 2026
Delighted to meet the Prime Minister of Finland, Mr. Petteri Orpo. This year has witnessed extensive engagements as far as India and Finland are concerned. PM Orpo himself had come to India for the AI Impact Summit. Our meeting today is aimed at giving new energy to bilateral… pic.twitter.com/8GvixngCVk
— Narendra Modi (@narendramodi) May 19, 2026
Oli ilo tavata Suomen pääministeri, herra Petteri Orpo. Tänä vuonna on nähty laajaa vuorovaikutusta Intian ja Suomen välillä. Pääministeri Orpo itse vieraili Intiassa AI Impact Summit -tapahtumassa. Tämänpäiväisen tapaamisemme tavoitteena on antaa uutta energiaa kahdenvälisiin… pic.twitter.com/2eEOYpCAZD
— Narendra Modi (@narendramodi) May 19, 2026