பி.எம்.இந்தியா
மூத்த நடிகர் சலீம் குமார் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சிறப்பான திரைப்பயணத்தில், பலதரப்பட்ட கதாபாத்திரங்களில், பன்முகத்தன்மையாலும் மறக்கமுடியாத நடிப்பாலும் முத்திரை பதித்தவர் அவர் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் துயரமான நேரத்தில், அந்த மூத்த நடிகரின் குடும்பத்தினருடனும் எண்ணற்ற ரசிகர்களுடனும் தமது எண்ணங்கள் இருப்பதாக திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மூத்த நடிகர் சலீம் குமாரின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. புகழ்பெற்ற திரைப்பயணத்தில், பலதரப்பட்ட கதாபாத்திரங்களில், பன்முகத்தன்மையாலும் மறக்கமுடியாத நடிப்பாலும் அவர் முத்திரை பதித்தார். இந்தத் துயரமான நேரத்தில் என் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் எண்ணற்ற ரசிகர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி.”
***
(Release ID: 2269985)
TV/PLM/RJ
Deeply saddened by the passing of veteran actor Shri Salim Kumar Ji. Over the course of a distinguished career, he made a mark with his versatility and memorable performances across a wide range of roles. My thoughts are with his family and countless admirers in this hour of…
— Narendra Modi (@narendramodi) June 7, 2026
പ്രമുഖ നടൻ ശ്രീ സലിം കുമാർ ജിയുടെ വിയോഗത്തിൽ അഗാധമായ ദുഃഖം രേഖപ്പെടുത്തുന്നു. വിശിഷ്ടമായ അഭിനയ ജീവിതത്തിൽ വൈവിധ്യമാർന്ന കഥാപാത്രങ്ങളിലൂടെയും അവിസ്മരണീയമായ പ്രകടനങ്ങളിലൂടെയും അദ്ദേഹം തന്റേതായ വ്യക്തിമുദ്ര പതിപ്പിച്ചു.ദുഃഖത്തിന്റെ ഈ വേളയിൽ എന്റെ ചിന്തകൾ അദ്ദേഹത്തിന്റെ കുടുംബത്തോടും…
— Narendra Modi (@narendramodi) June 7, 2026