Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வளர்ச்சியடைந்த துடிப்பான கிராமங்கள் திட்ட பங்கேற்பாளர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (26.07.2026) ‘விக்சித் வைப்ரண்ட் வில்லேஜ் திட்டம் 2026’ எனப்படும் வளர்ச்சியடைந்த துடிப்பான கிராமத் திட்டத்தில் பங்கேற்றவர்களுடன் கலந்துரையாடினார். இளைஞர்களுக்கான இந்த திட்டத்தில் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற மகத்தான பங்கேற்பை எடுத்துரைத்த அவர், நாடு முழுவதும் உள்ள சுமார் 250 மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆர்வமுள்ள இளம் பங்கேற்பாளர்களை அன்புடன் வரவேற்றார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மை பாரத்’ தளம் வெற்றிகரமாக நிறுவப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், கோடிக்கணக்கான இளைஞர்களை உள்ளடக்கும் வகையில் அது மிகப்பெரிய அளவில் விரிவடைந்திருப்பதைப் பாராட்டினார். நாடு முழுவதும் உள்ள இளைஞர்களால் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் மிகவும் பாராட்டத்தக்க பணிகளைப் பாராட்டிய அவர், குறிப்பாக அவர்களின் சிறப்பான திறன்களைக் குறிப்பிட்டார். “இன்று, ‘மை பாரத்’-ன் இளம் நண்பர்கள் நாடு முழுவதும் பாராட்டத்தக்க பணிகளைச் செய்து வருகின்றனர்,” என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

 இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், லடாக் ஆகிய பகுதிகளில் உள்ள எல்லைக் கிராமங்களுக்கு இளைஞர்களை அனுப்பும் நோக்கத்தை விவரித்த அவர், உள்ளூர் கலாச்சாரங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவும், இப்பகுதிகளை இயக்கும் ஆழ்ந்த தேசபக்தி உணர்வுகளைக் காணவும், மூன்று லட்சம் பங்கேற்பாளர்களிலிருந்து 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறினார்.

வளர்ச்சியடைந்த கிராமங்களே வளர்ச்சியடைந்த பாரதத்தைக் கட்டமைப்பதற்கான முழுமையான அடித்தளத் தூண்கள் என்று அவர் கூறினார். இளைய தலைமுறையினரின் தீவிரமான ஈடுபாடு, பரந்த தேசிய தொலைநோக்குப் பார்வையை விரிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் முன்னேற்றத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கான அவர்களின் தனிப்பட்ட உறுதியையும் ஆழமாக வலுப்படுத்துகிறது என்று பிரதமர் எடுத்துரைத்தார்.

எல்லைப் பகுதிகளில் உள்ள வாழ்க்கையின் கடுமையான இன்னல்களை எடுத்துரைத்த பிரதமர், தங்களின் கடினமான சூழ்நிலைகளிலும் ஒவ்வொரு கணமும் தேசபக்தியை வாழ்வாகவும் மூச்சாகவும் கொண்டுள்ள அப்பகுதி மக்களைப் பாராட்டினார். சாலைகள், மின்சாரம், மருத்துவமனைகள் போன்ற அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லாத ‘கடைசி கிராமங்களாக’ இப்பகுதிகளைக் கைவிட்ட கடந்தகால நிர்வாகப் புறக்கணிப்பைக் கூறிய அவர், இந்த அரசு அவற்றை ‘முதல்’ கிராமங்களாக மாற்றி இருப்பதாக கூறினார். முன்னெப்போதும் இல்லாத வகையில் மின்சாரம், சாலைகள், குழாய் நீர், எரிவாயு இணைப்புகள், சிறந்த இணைய வசதி உள்ளிட்ட வசதிகள் எல்லைப்புற மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கின்றன என்று அவர் கூறினார்.

புதிதாக நிறுவப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளால் உருவாகும் தொடர்ச்சியான பொருளாதாரப் பலன்களை எடுத்துக் கூறிய காட்டிய பிரதமர், பிராந்திய சுற்றுலாவில் ஏற்பட்டுள்ள மாபெரும் மறுமலர்ச்சியை எடுத்துரைத்தார். 

நமது இளைஞர் சக்தி நாட்டின் வளர்ச்சியில் இணையும்போது, எதிர்காலம் நிச்சயமாகவும் உறுதியாகவும் பிரகாசமாக இருக்கும் என்று திரு நரேந்திர மோடி உறுதிபட கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289664&reg=3&lang=1

***

TV/PLM/RJ