பி.எம்.இந்தியா
2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மகளிர் 58 கிலோ பளு தூக்கும் பிரிவில் வெண்கலம் வென்ற வீராங்கனை பிந்தியாராணி தேவி சொரோகாய்பமுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவரது வெற்றிக்கு கடின உழைப்பும், மன உறுதியும் காரணம் என்று பிரதமர் கூறியுள்ளார்.
அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு திரு மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது: “பளு தூக்கும் பிரிவில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம்! கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் 58 கிலோ எடை பிரிவில் வெண்கலம் வென்ற பிந்தியாராணி தேவி சொரோகாய்பமால் பெருமிதம் அடைகிறோம். அவரது வெற்றிக்கு கடின உழைப்பும் மனஉறுதியும்தான் காரணம். அவரது எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
—-
(Release ID: 2290216)
TV/IR/KPG/KR
Yet another medal for India in Weightlifting! Proud of Bindyarani Devi Sorokhaibam for winning a Bronze in the Women's 58kg event at the Glasgow Commonwealth Games. Her success is due to her hard work and determination. Wishing her the very best for the endeavours ahead.… pic.twitter.com/Ly2MMEKjCL
— Narendra Modi (@narendramodi) July 28, 2026