பி.எம்.இந்தியா
இங்கிலாந்து பிரதமர் திரு ஆண்டி பர்ன்ஹாம், இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.
பிரதமர் திரு பர்ன்ஹாம் பதவியேற்றதற்குப் பிரதமர் திரு மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவரது பதவிக்காலம் சிறப்பாக அமையவும் வாழ்த்தினார்.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்திய-இங்கிலாந்து தொலைநோக்குத் திட்டம் 2035-க்கு இணங்க, தொழில்நுட்பம், புத்தாக்கம், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, தூய்மையான எரிசக்தி, கல்வி மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் அண்மையில் நடைமுறைக்கு வந்ததை வரவேற்ற தலைவர்கள், இரு நாட்டு மக்களின் கூட்டு வளம் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த ஒப்பந்தத்தின் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
பரஸ்பர நலன் பயக்கும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
தொடர்ந்து எதிர்காலத்திலும் தொடர்பில் இருக்க இருவரும் இசைவு தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2292691®=3&lang=1
—
TV/BR/SE
Delighted to speak with Prime Minister of the United Kingdom Andy Burnham. Congratulated him on assuming office and conveyed my best wishes for a successful tenure.
— Narendra Modi (@narendramodi) July 31, 2026
We agreed to work together across sectors such as technology, innovation, defence, security, clean energy,…