Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஜூடோ பிரிவில் வெள்ளி வென்ற யாமினி மௌரியாவுக்குப் பிரதமர் வாழ்த்து


2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 57 கிலோ ஜூடோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாமினி மௌரியாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

யாமினி மௌரியா மிகச் சிறப்பாக விளையாடியதாகவும், ஜூடோ மீதான அவரது ஆர்வம் அவரது ஆட்டத்தில் தெளிவாகப் பிரதிபலித்ததாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

அவரது சாதனை பல இளைஞர்களை ஜூடோ விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஜூடோ 57 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாமினி மௌரியாவுக்கு வாழ்த்துகள்! அவர் மிகச் சிறப்பாக விளையாடினார். ஜூடோ மீதான அவரது ஆர்வம் அவரது செயல்பாட்டில் தெளிவாகப் பிரதிபலித்தது. அவரது இந்தச் சாதனை, வரும் காலங்களில் பல இளைஞர்களை ஜூடோவின் பக்கம் ஈர்க்கும். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.”

****

(Release ID: 2292833)

TV/PLM/RJ