Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காமன்வெல்த் ஆடவர் 60 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்ற சச்சின் சிவாச்சிற்கு பிரதமர் வாழ்த்து


கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 60 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சச்சின் சிவாச்சிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சச்சின் சிவாச்சின் இந்தச் சாதனை பல இளம் குத்துச்சண்டை வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

அவரது எதிர்கால முயற்சிகளுக்குத் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பிரதமர், அவர் தொடர்ந்து இந்தியாவைப் பெருமைப்படுத்துவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“கிளாஸ்கோவில் சச்சின் சிவாச் தங்கம் வென்றார்!

ஆடவர் 60 கிலோ குத்துச்சண்டை பிரிவில் பெற்ற வெற்றிக்கு அவருக்கு வாழ்த்துகள். அவர் பல இளம் குத்துச்சண்டை வீரர்களை ஊக்குவிப்பார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு என் வாழ்த்துகள். அவர் எப்போதும் இந்தியாவைப் பெருமைப்படுத்தட்டும்.”

***

(Release ID : 2293185)

TV/PLM/RJ