பி.எம்.இந்தியா
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 70 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அருந்ததி சௌத்ரிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமது அற்புதமான வெற்றியின் மூலம் அருந்ததி சௌத்ரி சரித்திரம் படைத்துள்ளார் என்றும், அவரது திறமையையும் அசைக்க முடியாத தன்னம்பிக்கையையும் பாராட்டுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
வரும் ஆண்டுகளில் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 70 கிலோ குத்துச்சண்டை பிரிவில் அருந்ததி சௌத்ரி ஒரு அற்புதமான தங்கப் பதக்கத்துடன் சரித்திரம் படைத்துள்ளார்! அவர் திறமையையும் அசைக்க முடியாத தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். அவருக்கு வாழ்த்துகள். வரும் ஆண்டுகளில் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்.”
***
(Release ID: 2293183)
TV/PLM/RJ
Arundhati Choudhary scripts history with a brilliant Gold in the Women’s 70 kg Boxing event at the Glasgow Games! She displayed technical excellence and unwavering confidence. Congratulations to her. Wishing her many more successes in the years ahead.#CWG2026
— Narendra Modi (@narendramodi) August 1, 2026