Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காமன்வெல்த் மகளிர் 57 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்ற ஜாஸ்மின் லம்போரியாவுக்கு பிரதமர் வாழ்த்து


கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 57 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஜாஸ்மின் லம்போரியாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜாஸ்மின் லம்போரியாவின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் அவரது வெற்றியில் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன என்று பிரதமர் கூறியுள்ளார்.

அவரது எதிர்கால முயற்சிகளுக்கு திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 57 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்ற ஜாஸ்மின் லம்போரியாவுக்கு வாழ்த்துக்கள். அவரது அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் அவரது வெற்றியில் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்.”

***

(Release ID: 2293175)

TV/PLM/RJ