பி.எம்.இந்தியா
தேசிய கைத்தறித் தினத்தை முன்னிட்டு, நாட்டின் வளமான மற்றும் சிறப்பான கைத்தறிப் பாரம்பரியத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குத் தம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் காலத்தால் அழியாத தொன்மையான பாரம்பரியத்தைத் தங்களின் இணையற்ற கைவினைத்திறனால் தலைமுறைகள் கடந்தும் பாதுகாத்து வளப்படுத்தி வரும் நெசவாளர்கள், கைவினைஞர்களின் திறமை, படைப்பாற்றல், அர்ப்பணிப்பு உணர்விற்குப் பிரதமர் தமது மரியாதையைச் செலுத்தியுள்ளார்.
கிராமப்புற மேம்பாடு, மகளிர் தலைமையிலான வளர்ச்சி, தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு கைத்தறித் துறை ஒரு வலுவான தூணாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், நெசவுத் துறையையும் நெசவாளர்களையும் ஊக்குவிப்பதில் மத்திய அரசு எப்போதும் உறுதியோடு செயல்படும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“தேசிய கைத்தறித் தினமான இன்று, இந்தியாவின் வளமான, சிறப்பான கைத்தறிப் பாரம்பரியத்தை நாம் கொண்டாடுகிறோம். நமது நெசவாளர்கள், கைவினைஞர்களின் திறமை, படைப்பாற்றல், அர்ப்பணிப்பு உணர்விற்கும் நமது வணக்கத்தைச் செலுத்துகிறோம். பல தலைமுறைகளாக, அவர்கள் நமது பாரம்பரியத்தைப் பாதுகாத்து வளப்படுத்தி வருகின்றனர்.
நமது அரசு கைத்தறித் துறைக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும். இது கிராமப்புற மேம்பாடு, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, தற்சார்பு இந்தியாவின் இலக்கை எட்டுவதில் முக்கியத் தூணாக விளங்கும் கைத்தறித் துறைக்கு நமது அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும்.
#NationalHandloomDay என்ற குறிச்சொல்லைப் பயன்படுத்தி, உங்களுக்குப் பிடித்த கைத்தறிப் பொருட்கள் மற்றும் ஆடைகளை அணிந்து தயாராகும் காணொளிகளைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது இத்துறையைச் சேர்ந்த கைவினைஞர்களைப் பெருமளவில் ஊக்குவிக்கும். ”
***
(Release ID: 2295848)
VJ/SE/RJ
Today, on National Handloom Day, we celebrate India’s rich and vibrant handloom heritage. We also salute the skill, creativity and dedication of our weavers and artisans. For generations, they have preserved and enriched our traditions.
— Narendra Modi (@narendramodi) August 7, 2026
Our Government will keep supporting the…