பி.எம்.இந்தியா
இந்தியாவின் வளர்ந்து வரும் தற்சார்பு மருத்துவ தொழில்நுட்பச் சூழலமைப்பு குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே பி நட்டா எழுதியுள்ள கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். உள்நாட்டு உற்பத்தி, இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்தல், உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம், மருத்துவ சாதனங்கள் உற்பத்திப் பூங்கா போன்ற பல்வேறு திட்டங்களால் தன்னிறைவு நிலையை அடைவது சாத்தியமாகிறது என்றும், இது இந்தியாவை குறைந்த செலவில், அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய சுகாதார சேவைகளில் கவனம் செலுத்தும் ஒரு நம்பகமான, உலகளவிலான மருத்துவ தொழில்நுட்ப நட்பு நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்கிறது என்றும், திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
உள்நாட்டு உற்பத்தி, இறக்குமதி சார்பு குறைப்பு, உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம், மருத்துவ சாதன உற்பத்திக்கான பூங்காக்கள் போன்ற திட்டங்களால் உத்வேகம் பெற்று, இந்தியாவின் வளர்ந்து வரும் தற்சார்பு பெற்ற மருத்துவ தொழில்நுட்பச் சூழலமைப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜே பி நட்டா விரிவாக எடுத்துரைக்கிறார். குறைந்த விலையில், எளிதில் கிடைக்கக்கூடிய சுகாதார சேவைகளில் கவனம் செலுத்தும், நம்பகத் தன்மையுடன் கூடிய, உலகளவிலான மருத்துவ தொழில்நுட்ப நட்பு நாடாக இந்தியா, சீரான வளர்ச்சி கண்டு வருகிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296477®=3&lang=1
***
TV/SV/RJ
Union Health Minister Shri @JPNadda highlights India’s growing self-reliant med-tech ecosystem, driven by domestic manufacturing, reduced import dependence and schemes such as PLI and Medical Device Parks. He says India is steadily emerging as a trusted global med-tech partner… pic.twitter.com/3Nay5YG5gh
— PMO India (@PMOIndia) August 8, 2026