Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காமன்வெல்த் விளையாட்டுச் சாம்பியன்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்

காமன்வெல்த் விளையாட்டுச் சாம்பியன்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்


இந்தியாவின் காமன்வெல்த் விளையாட்டுச் சாம்பியன்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய விளையாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த 12 முதல் 13 ஆண்டுகால தனது பதவிக்காலத்தில் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களைத் தனது இல்லத்தில் வரவேற்பது வழக்கமான மகிழ்ச்சிக்குரிய மரபு என்று கூறினார். நாட்டின் வெற்றிக்காக இந்திய விளையாட்டு வீரர்களுடைய அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளும், தொடர் வெற்றிகளும் வழக்கமான அறிவுரையைவிட பள்ளி மாணவர்களுக்கு மேலும் திறன்மிக்க வகையில் ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்தார். தாங்கள் பள்ளிக்குச் சென்று, உரையாற்றுவதைவிட அவர்களுடைய பதக்கம் மாணவர்களை மேலும் ஊக்குவிப்பதாகத் திரு மோடி கூறினார்.

விளையாட்டுத் துறையில் தமது மகள்களை ஈடுபடுத்துவது குறித்து முன்னதாக அளித்த வாக்குறுதியை நினைவுபடுத்திய ஒரு விளையாட்டு விராங்கனையுடன் பிரதமர் உரையாடினார். அவரது முன்னேற்றம் குறித்துக் கேட்டறிந்ததோடு, எதிர்கால காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் அவருடைய மகள்கள் மூன்று பேரும் பதக்கங்களை வென்று வருவார்கள் என்ற உறுதியையும் அவரிடமிருந்து பெற்றார். அவருடைய நம்பிக்கையை மனப்பூர்வமாகப் பாராட்டிச் சிறந்து விளங்குவதற்கான அவரது அர்ப்பணிப்பை ஊக்குவித்தார்.

விளையாட்டு வீரர்களின் உணர்வுப்பூர்வமிக்க பயணம் குறித்துக் குறிப்பிட்ட பிரதமர், குருபூர்ணிமா நாளன்று பெற்ற வெற்றியைத் தமது பயிற்சியாளருக்கு அர்ப்பணித்த ஒரு வீரரின் விடாமுயற்சியையும், நான்கு ஆண்டுகளாகத் தொடர் காயங்கள், கடினமான தருணங்களைக் கடந்து தேசியக்கொடி ஏற்றப்படும்போது பதக்க மேடையில் கண்ணீர் வடித்த மற்றொரு வீரரின் உணர்வையும் சுட்டிக்காட்டினார். இது போன்ற தேசிய அளவிலான வெற்றிகள் தனிப்பட்ட சாதனைகளுக்கு அப்பால், எதிர்கால சந்ததியினருக்கு ஒரு நீடித்த உத்வேகத்தின் ஆதாரமாகத் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார். அவர்களுடைய வெற்றி எதிர்கால சந்ததியினருக்குப் பெரும் உத்வேகமாக அமைகிறது என்று திரு மோடி உறுதிபட தெரிவித்தார்.

சர்வதேச அரங்கில் வளர்ந்து வரும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கான மரியாதை, அச்சம் குறித்தும் பிரதமர் கலந்துரையாடினார். இந்திய வீரர்களை எதிர்கொள்ளும்போது உலகளாவிய போட்டியாளர்கள் தற்போது தயக்கமடைவதாக அவர் கூறினார். குறிப்பாக இந்திய குத்துச்சண்டை வீரர்களின் வளர்ந்து வரும் நிலை குறித்துச் சுட்டிக்காட்டிய அவர், கேலோ இந்தியா திட்டம் போன்ற அடிப்படை நிலையிலான முன்முயற்சிகள், அரசின் தொடர்ச்சியான போட்டிக்கான ஆதரவு ஆகியவை ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து விளையாட்டு வீரர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். உலகளவிலான விளையாட்டு வீரர்கள் தற்போது இந்திய குத்துச்சண்டை வீரர்களைக் கண்டு அஞ்சத் தொடங்கியுள்ளதாகத் திரு மோடி குறிப்பிட்டார்.

கேலோ இந்தியா திட்டத்தின் பெருமிதத்தை விரிவுப்படுத்தும் அதேவேளையில், கற்றுக்கொள்ளக்கூடிய இளம் வீரர்களின் பணிவான மனப்பான்மையைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறி, விளையாட்டு மேம்பாட்டிற்கு அடிப்படையாக உள்ள கோட்பாட்டை பிரதமர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297085&reg=3&lang=1

***

SS/IR/GS/SH