பி.எம்.இந்தியா
அரசு மின்னணுச் சந்தை (ஜெம்) மூலம் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகளை விவரிக்கும் மத்திய அமைச்சர் திரு பியூஸ் கோயலின் கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். வெளிப்படையான கொள்முதல், அதிக பங்களிப்பு, சிறந்த வாய்ப்புகள் ஆகியவை குறித்து எடுத்துரைத்துள்ள அவர் இதன் காரணமாக, அரசு மின்னணுச் சந்தை தளம் பொது கொள்முதல் முறையை மாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தத் தளம் மேலும், போட்டி மிகுந்த, உள்ளடக்கிய சூழலை உருவாக்கிக் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எளிதாக வர்த்தகம் செய்வதை வலுப்படுத்தியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இது, குறிப்பாக குறு, சிறு, நடுத்தர தொழில்துறையினர், மகளிர் தொழில்முனைவோர் ஆகியோருக்கு பயனுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:
“வெளிப்படையான கொள்முதல், அதிக பங்களிப்பு, சிறந்த வாய்ப்புகள்…. இதுவே, இந்தியாவின் அரசு மின்னணு சந்தை தளம் பொது கொள்முதல் முறையை மாற்றியுள்ளது.
தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தத் தளம் மேலும், போட்டி மிகுந்த, உள்ளடக்கிய சூழலை உருவாக்கி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எளிதாக வர்த்தகம் செய்வதை வலுப்படுத்தியுள்ளது. குறிப்பாக குறு, சிறு, நடுத்தர தொழில்துறையினர், மகளிர் தொழில்முனைவோர் ஆகியோருக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகள் குறித்து விரிவாக ஆராய மத்திய அமைச்சர் திரு பியூஸ் கோயல் எழுதியுள்ள கட்டுரையைப் படிக்கவும்.
(Release ID 2297526)
****
TV/IR/PS/SH
Transparent procurement, wider participation and better opportunities... This is how @GeM_India is transforming public procurement.
— PMO India (@PMOIndia) August 11, 2026
With technology at its core, the GeM platform has strengthened Ease of Doing Business over the last 10 years by creating a more competitive and… https://t.co/Z9rQLnGUXp