பி.எம்.இந்தியா
வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு எதிர்மறையான சூழ்நிலைகளைச் சாதகமானதாக மாற்றக்கூடிய திறன் கொண்ட உறுதிப்பாடு, விடாமுயற்சி, துணிச்சல் ஆகியவற்றை விளக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
எதிர்மறையான சூழல்களைச் சாதகமானதாக மாற்றக்கூடிய உறுதிப்பாடு, விடாமுயற்சி, துணிச்சல் ஆகியவற்றைக் கொண்ட ஒருவர், வாழ்க்கையில் ஏற்படும் சவால்களால் தோற்கடிக்கப்படுவதில்லை. மாறாக, தொடர்ச்சியான முயற்சி, அசைக்கமுடியாத உறுதிப்பாடு ஆகியவற்றின் மூலம் அவர் முன்னேறிச் சென்று இறுதியில் வெற்றி பெறுகிறார்.
***
(Release ID: 2298710)
SS/IR/PS/KR
दैवं पुरुषकारेण यः समर्थः प्रबाधितुम्।
— Narendra Modi (@narendramodi) August 13, 2026
न दैवेन विपन्नार्थः पुरुषः सोऽवसीदति॥ pic.twitter.com/EIKEcyk2Bk