Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மனிதகுலத்தை வடிவமைக்கும் புனிதமான பணியாகக் கற்பித்தலைச் சிறப்பித்துக் காட்டும் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு-வின் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு எழுதிய ஒரு கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

அறிவு, திறன்கள், மாண்புகள், ஊக்கம் ஆகியவற்றை புகட்டுவது மூலம் ஆசிரியர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கிறார்கள் என்று குடியரசுத்தலைவர் எழுதியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தக் கட்டுரை, மனிதகுலத்தை வடிவமைக்கும் ஒரு புனிதமான பணியாகவும், சுதந்திரமான சிந்தனையையும் ஆர்வத்தையும் ஊக்குவிப்பதாகவும் கற்பித்தலை எடுத்துக்காட்டுவதோடு, கலாச்சாரப் பாரம்பரியம், அறிவியல் கண்ணோட்டம், ஏழைகளுக்கு உதவும் கொள்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தேசமே முதன்மையானது ஆகியவற்றை நிலைநிறுத்தும் நல்ல மனிதர்களாக மாணவர்களை வழிநடத்துமாறு ஆசிரியர்களை வலியுறுத்துகிறது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“அறிவு, திறன்கள், மாண்புகள், ஊக்கம் ஆகியவற்றை மாணவர்களுக்கு புகட்டுவதன் மூலம் ஆசிரியர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கிறார்கள் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு எழுதியுள்ளார்.

மனிதகுலத்தை வடிவமைக்கும், சுதந்திரமான சிந்தனையையும் ஆர்வத்தையும் ஊக்குவிக்கும் ஒரு புனிதமான பணியாகக் கற்பித்தலை அவர் முன்னிலைப்படுத்துகிறார்.

கலாச்சாரப் பாரம்பரியம், அறிவியல் கண்ணோட்டம், ஏழைகளுக்கு உதவும் கொள்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தேசமே முதன்மையானது என்ற சிந்தனை ஆகியவற்றை நிலைநிறுத்தும் நல்ல மனிதர்களாக மாணவர்களை வழிநடத்துமாறு ஆசிரியர்களை அவர் கேட்டுக்கொள்கிறார்.”

****

(Release ID: 2306923)

SS/PLM/RJ