பி.எம்.இந்தியா
மகாராஷ்டிரா மாநிலம் நந்தேடில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தோர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டுள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் நிவாரண உதவி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது-
மகாராஷ்டிரா மாநிலம் நந்தேடில் உயிரிழப்பு ஏற்படுத்திய விபத்து மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது. எனது எண்ணங்கள் இந்த இக்கட்டான தருணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உறுதுணையாக இருக்கும். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் வழங்கப்படும்.
***
(Release ID: 2309001)
SS/SV/SM/RJ
Saddened by the loss of lives due to a mishap in Nanded, Maharashtra. My thoughts are with the bereaved families in this hour of grief. Praying for the speedy recovery of the injured.
— PMO India (@PMOIndia) September 11, 2026
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The…
महाराष्ट्रात नांदेड येथे झालेल्या दुर्घटनेतील जीवितहानीबद्दल ऐकून दुःख झाले. या दुःखद प्रसंगी माझ्या संवेदना शोकाकुल कुटुंबीयांसोबत आहेत. जखमींच्या तब्येतीत लवकर सुधार होण्यासाठी मी प्रार्थना करतो.
— PMO India (@PMOIndia) September 11, 2026
प्रत्येक मृत व्यक्तीच्या निकटवर्तीयांना PMNRF मधून ₹2 लाखांची सानुग्रह मदत…