Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு நரேந்திர மோடி ஈரான் அதிபர் திரு மசூத் பெஷெஷ்கியானுடன் சந்திப்பு

பிரதமர் திரு நரேந்திர மோடி ஈரான் அதிபர் திரு மசூத் பெஷெஷ்கியானுடன் சந்திப்பு


பிரதமர் திரு நரேந்திர மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இன்று (11.09.2026) புது தில்லியில் ஈரான் அதிபர் திரு மசூத் பெஷெஷ்கியானைச் சந்தித்தார். இரண்டு வாரங்களுக்குள் இரு தலைவர்களும் சந்திக்கும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும். முன்னதாக, 2026 ஆகஸ்ட் 31 அன்று பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக அவர்கள் சந்தித்திருந்தனர்.

 

இரு தலைவர்களும் இருதரப்பு உறவின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர். சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், பிரிக்ஸ் தொடர்பான கூட்டங்களில் ஈரான் தொடர்ந்து உயர் மட்டத்தில் பங்கேற்று வருவதற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். உலக தெற்கு நாடுகளில் மீள்திறன், புதுமை, ஒத்துழைப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றை வளர்ப்பதில் பிரிக்ஸுக்கு உள்ள ஆற்றலை அவர் குறிப்பிட்டார். மேலும், பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் பங்கேற்றதற்காக ஈரான் அதிபர் பெஷெஷ்கியனுக்கு திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

 

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அனைத்துப் பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலையான உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். மேலும், அப்பகுதியில் நீடித்த அமைதி, ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும், கடல்வழிப் போக்குவரத்தையும் வர்த்தக சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கும், மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தொடர்ச்சியான முயற்சிகள் தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

 

பிரிக்ஸ் உள்ளிட்ட பலதரப்பு அமைப்புகளில் பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்களில் இரு தரப்பினருக்கும் இடையே தொடரும் ஒத்துழைப்பை பிரதமர் திரு நரேந்திர பாராட்டினார்.

 

(Release ID : 2309308)

****

TV/PLM/SH