Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சம்வத்சரி நாளையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


சம்வத்சரி என்ற புனிதமிக்க நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மன்னிப்பும், கருணையும் அனைத்து உறவுகளையும் வலுப்படுத்துவதாக சம்வத்சரி நமக்கு நினைவூட்டுவதாக திரு மோடி கூறியுள்ளார். அனைவரும் பணிவை கடைபிடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ள அவர், அன்பு,  நற்பண்புகள் ஆகியவை தங்களுடைய நடவடிக்கைகளை வழிநடத்தட்டும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

மன்னிப்பும், கருணையும் அனைத்து உறவுகளையும் வலுப்படுத்துவதாக சம்வத்சரி நமக்கு நினைவூட்டுகிறது.

இந்த புனிதமிக்க நாளில், பணிவு நம்மை வழிநடத்தட்டும், அன்பு, நற்பண்பு ஆகியவை நமது ஒவ்வொரு நடவடிக்கையையும் வழிநடத்தட்டும்.

மிச்சாமி துக்கடாம்!

***

Release ID: 2310317

TV/IR/PS/GS