பி.எம்.இந்தியா
விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள கட்டுமானம், படைப்புத் தொழில்களில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள், கைவினைஞர்கள், திறன்மிக்கப் பணியாளர்கள் ஆகியோருக்குத் திரு மோடி சிறப்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். வளர்ச்சியடைந்த, தன்னிறைவுப் பெற்ற இந்தியா குறித்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் கைவினைஞர்கள், திறன்மிக்கப் பணியாளர்கள் ஆகியோரின் திறன், அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகியவை முக்கியப் பங்கு வகிப்பதாகப் பிரதமர் கூறியுள்ளார். நாட்டைக் கட்டமைக்கும் அவர்களுடைய முயற்சிகளுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும், ஊக்கத்தையும் அரசு அளிப்பதற்கான உறுதிப்பாட்டை அவர் குறிப்பிட்டார்.
பகவான் விஸ்வகர்மாவுடன் தொடர்புடைய காலத்தால் அழியாத ஞானத்தை வெளிப்படுத்தக்கூடிய சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311199®=3&lang=1
***
TV/IR/GS/SM
आप सभी को भगवान विश्वकर्मा जयंती की बहुत-बहुत शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) September 17, 2026
देवशिल्पी से जुड़े इस दिव्य अवसर पर निर्माण कार्यों में जुटे देशभर के शिल्पकारों एवं हुनरमंद साथियों को मेरा विशेष अभिनंदन।
आपका कौशल एवं परिश्रम विकसित और आत्मनिर्भर भारत के संकल्प को साकार करने में अत्यंत महत्वपूर्ण… pic.twitter.com/wiw8Ek9dpq