Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையில் ஆடவர் ஒருங்கிணைந்த குழுப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணிக்குப் பிரதமர் வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையில் ஆடவர் ஒருங்கிணைந்த குழுப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியின் குஷால் தலால், சாஹில் ராஜேஷ் ஜாதவ், கணேஷ் மணிரத்னம் திருமுரு ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் தங்களது சிறப்பான திறனை வெளிப்படுத்தி தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணி குறித்து பெருமிதம் தெரிவித்தப் பிரதமர், அவர்களது துல்லியமான குழுப் பணியின் சிறப்பான செயல்பாட்டிற்குப் பாராட்டு தெரிவித்தார்.

தங்கப்பதக்கம் வென்ற வில்வித்தை வீரர்களின் எதிர்கால முயற்சிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையில் ஆடவர் ஒருங்கிணைந்த குழுப் பிரிவு இறுதிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியின் குஷால் தலால், சாஹில் ராஜேஷ் ஜாதவ் மற்றும் கணேஷ் மணிரத்னம் திருமுரு ஆகியோருக்கு வாழ்த்துகள். அவர்களது துல்லியமான செயல்பாடுகள், குழுப் பணி ஆகியவை வெகு சிறப்பாக அமைந்திருந்தன. தங்கப்பதக்கம் வென்ற இந்திய வில்வித்தை வீரர்களுக்கு வாழ்த்துகள். அவர்களது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”   

***

(Release ID: 2317073)

SS/SV/RJ/SH