பி.எம்.இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்களது தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்ட இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது உண்மையிலேயே நாட்டிற்கு ஒரு மகிழ்ச்சியான தருணம் என்று பிரதமர் கூறியுள்ளார்.
அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்குத் தமது நல்வாழ்த்துகளைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மீண்டும் இந்தியாவிற்குத் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்களது பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்ட நமது ஆடவர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள். இது உண்மையிலேயே நாட்டிற்கு ஒரு மகிழ்ச்சியான தருணம். அணி வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திரமோடி”
****
(Release ID : 2318678)
TV/PLM/RJ
The Gold comes to India yet again!
— PMO India (@PMOIndia) October 3, 2026
Congratulations to our Men’s Cricket Team on retaining their title at the Asian Games. This is indeed a joyous occasion for the nation. My best wishes to the team members for their future endeavours: PM @narendramodi