Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி பயணம் எவ்வாறு குறிப்பிடத்தக்க மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


திரு மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவின் வளர்ச்சி பயணம் எவ்வாறு குறிப்பிடத்தக்க மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து திரு வெங்கையா நாயுடு எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். அதாவது, வழக்கமாக நடப்பது நடக்கட்டும் என்ற அணுகுமுறையில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்துவது சாத்தியமே என்ற வலுவான நம்பிக்கையை நோக்கிய மாற்றம் இதுவாகும்.

இம்மாற்றம் நிர்வாகம், வளர்ச்சியின் பல்வேறு துறைகளில் எதிரொலிக்கிறது. வங்கித் துறை சீர்திருத்தங்கள், மின்னணு பணப்பரிவர்த்தனைகளின் விரைவாக விரிவாக்கம், வறுமை ஒழிப்பு முயற்சிகள் ஆகியவை தொடர்ச்சியான, உறுதியான செயல்பாடுகளின் மூலம் நீடித்த சவால்களை எதிர்கொள்ளும் திறனை வெளிப்படுத்தியுள்ளன.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் இந்தியாவை ‘நடப்பது நடக்கட்டும்’ என்ற மனப்பான்மையில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்துவது சாத்தியமே என்ற மனநிலைக்கு மாற்ற உதவியுள்ளதாக முன்னாள் குடியரசு துணைத்தலைவர் திரு வெங்கையா நாயுடு எழுதியுள்ளார். வங்கி சீர்திருத்தங்கள் முதல் மின்னணு பணப்பரிவர்த்தனைகள், வறுமை ஒழிப்பு வரை ஒரு காலத்தில் செயல்படுத்த முடியாது என கருதப்பட்ட சவால்கள் உறுதிப்பாட்டுடன் எதிர்கொள்ளப்பட்டன.

வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய இந்திய பயணத்தை வடிவமைக்கும் மனநிலை குறித்து அறிந்து கொள்ள இக்கட்டுரையை அவசியம் படிக்க வேண்டும். https://indianexpress.com/article/opinion/columns/from-chalta-hai-to-badal-sakta-hai-changing-the-way-india-thinks-10909840/

***

(Release ID: 2319931)

TV/IR/SM/GS