பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, முன்னாள் துணைப் பிரதமர் திரு எல்.கே. அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார். திரு அத்வானியின் பல தசாப்தகால பொதுச்சேவையையும், பொது வாழ்வில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் சுட்டிக்காட்டிய திரு மோடி, நாட்டின் முன்னேற்றத்தில் அவரது பங்களிப்புகள் நீங்காத முத்திரையைப் பதித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதாவது:
“திரு அத்வானி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றேன்.
பல தசாப்தங்களாக அவர் ஆற்றிய பொதுச்சேவையும், பொது வாழ்வில் அவர் அளித்த பங்களிப்பும் அழியாத தடத்தைப் பதித்துள்ளன.
இந்தியாவின் முன்னேற்றத்தை வலுப்படுத்துவதில் அவர் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார்.”
***
(Release ID 2320443)
TV/BR/SU
Met Advani Ji at his residence and sought his blessings. His decades of public service and contribution to our national life have left a lasting imprint. He has played a pivotal role in strengthening India's progress. https://t.co/ib51lx4CkU
— Narendra Modi (@narendramodi) October 7, 2026