Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அரசுத் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதற்கு வாழ்த்து தெரிவித்த டொமினிகா பிரதமர் திரு ரூஸ்வெல்ட் ஸ்கெரிட்டிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்


தமக்கு வாழ்த்து தெரிவித்த டொமினிகா பிரதமர் திரு ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் அவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.  டொமினிகாடனான நீண்டகால நட்புறவை இந்தியா மிகவும் உயர்வாகக் கருதுவதாக அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், மக்களின் கூட்டு முன்னேற்றம் மற்றும் வளமைக்காக இணைந்து பணியாற்றவும் தனது உறுதிப்பாட்டை திரு மோடி வெளிப்படுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

“பிரதமர் திரு ஸ்கெரிட் அவர்களே, உங்களது அன்பான வாழ்த்துகளுக்கும் கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி. டொமினிகாவுடனான நீண்டகால நட்பை இந்தியா மிகவும் மதிக்கிறது. நமது மக்களின் கூட்டு முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக, இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், இணைந்து பணியாற்றவும் ஆவலுடன் இருக்கிறோம்.

@SkerritR”

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320399&reg=3&lang=1  

***

TV/BR/SU