பி.எம்.இந்தியா
அரசுத் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகள் சேவையாற்றியதை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த கிரெனடா பிரதமர் திரு டிக்கன் மிட்செலுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் கிரெனடாவுக்கும் இடையிலான நட்புறவை தாம் மிகவும் உயர்வாகக் கருதுவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“பிரதமர் திரு டிக்கன் மிட்செல் அவர்களே, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தியா, கிரெனடா இடையிலான நட்புறவை நான் பெரிதும் மதிக்கிறேன். நமது உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருக்கிறேன்.
@hondickon”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320944®=3&lang=1
****
TV/BR/SH
Thank you, Prime Minister Dickon Mitchell, for your warm wishes. I deeply value the friendship between India and Grenada and look forward to further strengthening our close ties. @hondickon
— Narendra Modi (@narendramodi) October 8, 2026